தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

DIN

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2017 -ஆம் ஆண்டு நவம்பர் 17 -ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், அதுதொடர்பான அறிவிப்பாணையை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 -ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ் கான் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலர் டி.எஸ்.ராஜசேகர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
 நீதிபதிகள் கேள்வி: இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "1996 -ஆம் ஆண்டு வார்டு வரையறைப்படி, கடந்த 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது' எனக் கேள்வி எழுப்பினர்.
 அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.துரைசாமி, "உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று வார்டு மறுவரையறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை' என தெரிவித்தார்.
 அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், "உள்ளாட்சித் தேர்தலை நடத்த எந்தச் சட்டமும் தடையாக இல்லை. இந்த அவமதிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இனிமேலும் தேர்தலை நடத்த அக்கறை காட்டமாட்டார்கள்' என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 23 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT