தமிழ்நாடு

சபரிமலை விஷயத்தில் கேரள அரசு அரசியல் செய்கிறது

DIN

சபரிமலை ஐயப்பன் கோயில் விஷயத்தை கேரள அரசு அரசியலாகப் பார்க்கிறது. இந்தச் செயல் அங்குள்ள கம்யூனிஸ்ட் அரசுக்கு இறுதிக் காலமாக அமைந்துவிடும் என்றார் பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன்.
 நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை மாலை அளித்த பேட்டி:
 தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளவர்களுக்கு, நோயைக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகளால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
 டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து உண்மையான நிலவரத்தை அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க முடியும். அரசு சுகாதாரம், விழிப்புணர்வு, மருத்துவ சேவைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
 இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மட்டுமே ராணுவத் தளவாட மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
 பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்புப் பணம் ஒழிப்பின் அங்கம். இதனால் அரசுக்கு வரி செலுத்தாமல் இருந்தவர்கள் இப்போது வரி செலுத்தி வருகின்றனர். மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறிப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்துக்கொண்டு ஹிந்து மத நம்பிக்கையைச் சீர்குலைக்க வேண்டும், ஹிந்து மக்களைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சபரிமலைக்கு செல்ல ஒரு சில பெண்கள் முயற்சி செய்கின்றனர்.
 ஐயப்பன் கோயிலைப் பொருத்தவரை பெருமளவு பக்தர்களின் உணர்வுகளை பெண்கள் மதிக்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தை கேரள அரசு அரசியலாக பார்க்கிறது. இந்த செயல் அங்குள்ள கம்யூனிஸ்ட் அரசுக்கு இறுதிக் காலமாக அமைந்துவிடும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு வலுவான கூட்டணி அமையும். 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கட்சி போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்நிலைக்குழு அடுத்த வாரம் கூடி முடிவு செய்யும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT