தமிழ்நாடு

 தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார் விஜய்: சர்கார் பற்றி டிடிவி தினகரன்   

சர்கார் படத்தின் மூலமாக தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை நடிகர் விஜய் வெளிக்காட்டி இருக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

DIN

சென்னை: சர்கார் படத்தின் மூலமாக தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை நடிகர் விஜய் வெளிக்காட்டி இருக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படமானது தீபாவளி தினமான நவம்பர் 6 அன்று  வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 

இந்தப் படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், உரிய பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சர்கார் படத்தின் மூலமாக தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை நடிகர் விஜய் வெளிக்காட்டி இருக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சர்கார் சர்ச்சை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துஅவர் கூறியதாவது:

சர்கார் அடிப்படையில் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். ஒருவேளை படத்தை உருவாக்கியவர்கள் இலவசப் பொருட்கள் மக்களுக்குத் தேவையில்லாத ஒன்று என்று கருதினால் அவர்கள் அதனை முழுமையாக காட்டி இருக்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியையும், அதில் ஒட்டப்பட்டுள்ள படத்தையையும் காட்ட வேண்டியதுதானே?

அவர்கள் இலவச லேப்டாப், இலவச சைக்கிள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை என அனைத்தையும் அவர்கள் இவ்வாறுதான் கருதுவார்களா? இந்தியா ஒன்றும் முன்னேறிய நாடு அல்ல. வளர்ந்து வரும் நாடுதான். எனவே இது மக்களக்கு அவசியமான ஒன்றுதான். 

அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டி இருக்கிறார் வறியவர்கள் மற்றும் வாழ்க்கை நிலையில் சிரமப்படுபவர்கள் குறித்தான அவரது புரிதல் எத்தகையது என்பது இதன்மூலம் தெரிகிறது. 

அப்படிக் கூறுபவர்களின் படம் ரூ. 50 டிக்கெட்டானது ரூ.2000- த்திற்கு விற்கப்படுகிறது. இதை விரும்புவர்கள் வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் என்ன முறையாக வரி கட்டியா வாங்குகிறார்கள்?

இவ்வாறு தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT