தமிழ்நாடு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பை நாடு மறக்காது

DIN

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறக்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்குத் தள்ளிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது.
 வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறக்காது.
 அது மட்டுமா, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதுடன், சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது.
 நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT