தமிழ்நாடு

ரயில் பயணத்தில் மருத்துவ உதவிக்கு ரூ.100 கட்டணம்: இந்திய ரயில்வே முடிவு

DIN

ரயில் பயணத்தின்போது, மருத்துவ உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை அளிக்க ரூ.100 கட்டணம் நிர்ணயிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
 ரயில் பயணத்தில் பயணிகளுக்கு சுவாசப் பிரச்னை, நெஞ்சுவலி போன்றவை ஏற்படும்போது, அதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு டிக்கெட் பரிசோதகர் தகவல் அளிப்பார். இதையடுத்து, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் உடனே ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது. முதலுதவி, மருத்துவ ஆலோசனைகள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும். தேவையான மருத்துவ உதவியும் செய்து கொடுக்கப்படுகிறது.
 இந்நிலையில், ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக கட்டணம் நிர்ணயிக்க ரயில் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதில், "பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு அல்லது காயம் ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். மருந்து, மாத்திரைகள், ஊசி ஆகியவை அளித்து பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான கட்டணத்தை டிக்கெட் பரிசோதகர் வசூலிப்பார். இருப்பினும், ரயில் விபத்து மற்றும் தடம் புரளும் சம்பவம் காரணமாக பயணிகள் காயம் அடைந்தால், அப்போது இலவச மருத்துவ உதவி கொடுக்கப்படும். இது ரயில்வேயின் பொறுப்பு' என்று அதில் தெரிவித்துள்ளது.
 தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, திருச்சி, கோவை, சேலம், காட்பாடி உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் அவசர மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT