தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

DIN


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்தில் ரூ.100 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மா சத்திரம் அருகே தனியார் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் எதிர்பாராதவிதமாக அங்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் மளமளவென தீ நாலாபுறமும் பரவி எரிந்தது.

இதையடுத்து திருத்தணி, திருவள்ளூர், திருவூர், பேரம்பாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தீ விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT