தமிழ்நாடு

கூட்டணி முயற்சியால் பாஜக பதற்றம்

DIN

பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்து வரும் முயற்சியால் பாஜக பதற்றமடைந்துள்ளது என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
 பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 இந்த நிலையில், கனிமொழி வெள்ளிக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வரும், பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பாஜகவை பதற்றம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.
 மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதைப் போன்று, மதவாத பாஜகவையும், ஊழல் அதிமுகவையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT