தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு அதிமுக ரூ. 5 லட்சம் நிதி

DIN


அரூர் அருகே சிட்லிங் மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் கே.பி.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தச் சம்பவத்தில் சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22) என்பவரை தனிப்படை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (22) என்பவர் சேலம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
இந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் திங்கள்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் சிட்லிங் மலை கிராமத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் ஆறுதல்: சிட்லிங் மலை கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை நேரில் சந்தித்து மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, சிறுமியின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம் நிதியை ரொக்கமாக சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT