தமிழ்நாடு

எழும்பூரில் துரிதமாகச் செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்: வைரலாகும் விடியோ

DIN

எழும்பூர் ரயில் நிலையத்தில் தவறி விழுந்த பயணியை ரயில்வே போலீஸ் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த திங்கள்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து ஃபைஸாபாத் வரை செல்லும் ஷரத்தா சேது ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 5-ஆம் நடைமேடையில் இருந்து மதியம் 1 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. அப்போது அந்த ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் தவறி விழுந்தார். 

இந்நிலையில், ரயிலின் கீழ் சிக்கும் நிலையில், அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் சுமன், துரிதமாகச் செயல்பட்டு அவரைக் காப்பாற்றினார். இதையடுத்து அப்பயணிக்கு எக்காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார். 

இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்த ரயில்வே போலீஸின் செயல் பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT