தமிழ்நாடு

கஜா புயலினால் களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கு தமிழிசை பாராட்டு!

புயல் எச்சரிக்கை வந்த காலத்திலிருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இயங்கிய

DIN


சென்னை: புயல் எச்சரிக்கை வந்த காலத்திலிருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கு பாராட்டு என்றும் பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

தன் உயிரைத்துச்சமென மதித்து புயலால் திக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து உதவிக்கொண்டிருக்கும் பேரிடர்மேலாண்மை குழுவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கஜா புயலினால்பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நாம் அனைவரும் நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

கோடியக்கரைப் பகுதிக்கு மீட்புப்பணிக்குச் சென்ற விமானப்படை வீர்ர்களும் மற்றவர்களும் பாதுகாப்பாக மீட்கப்படவேண்டும் என வேண்டுகிறேன். 

கஜா புயலால் பாதித்த நாகை கடலூர் ராமநாதபுரம் தஞ்சை, திருவாரூர் பிற மாவட்டங்களில் உள்ள பாஜக நண்பர்கள் இளைஞர் அணியினர், மருத்துவ அணியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், புயல் எச்சரிக்கை வந்த காலத்திலிருந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட முதல்வருக்கும், களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் எனது பாராட்டுகள். பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

முதல் 100 செயலிகளின் பட்டியலில் எங்கே போனது ஸோஹோவின் அரட்டை?

ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT