தமிழ்நாடு

புயல் பாதித்த பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

DIN

கஜா புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார். 

இதுகுறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் 1 லட்சத்து 27 ஆயிரம் மரங்கள் சாய்ந்துள்ளன. 

ஏராளமான வன உயிரினங்கள், கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மருத்துவ முகாம்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். மின்சேதங்களை சீரமைக்கும் பணியில் 10 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

கஜா புயலால் 30 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

புயல் பாதித்த இடங்களில் எந்த பகுதியிலும் உணவு தட்டுப்பாடு இல்லை. கடலோர மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT