தமிழ்நாடு

வைகை, அமராவதி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோரப் பகுதிகளுக்கு சனிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து வைகை அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே அமராவதி அணையின் கொள்ளளவு 83 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT