தமிழ்நாடு

கடத்தல் சிலைகளை திருப்பிக் கொடுத்துவிட்டால் தண்டனையில்லை: ஐஜி பொன். மாணிக்கவேல்

கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் தாமாக முன் வந்து திருப்பிக் கொடுத்துவிட்டால் தண்டனையில்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

DIN


காஞ்சிபுரம்: கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் தாமாக முன் வந்து திருப்பிக் கொடுத்துவிட்டால் தண்டனையில்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணை இல்லத்தில் இன்று அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர், வீட்டுக்குள் இருந்து 80 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் ஒரு மாதத்துக்குள் தங்களிடம் இருக்கும் சிலைகளை திருப்பிக் கொடுத்து விட்டால் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம். தண்டனையில்லை. இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்.

கடத்தல் சிலைகள் என்று தெரிந்தால் அதுபற்றி தாமாகவே வந்து தகவல்களை அளிக்கலாம். தகவல்கள் வரவேற்கப்படுகின்றன.

சிலைக் கடத்தலில் தொடர்பில்லாதவர்கள் யாருமே பயப்பட வேண்டாம். குற்றமற்றவர்கள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படாது. சிலைக் கடத்தல் தொடர்பாக அறநிலையத் துறையில் மேலும் 9 அதிகாரிகளை ரிமாண்ட் செய்ய வேண்டியுள்ளது என்றும் பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT