தமிழ்நாடு

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு: கோவையில் ஐயப்ப சேவா சங்கத்தினர் பேரணி

DIN

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கோவையில் ஐயப்ப சேவா சங்கத்தினர் இன்று(சனிக்கிழமை) காலை பேரணி நடத்தினர். 

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று கேரள அரசும், தேவசம் போர்டும் தெரிவித்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கோவை சித்தாபுதூரில் ஐயப்ப சேவா சங்கத்தினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் மத்திய கயிறு வாரியத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் உட்பட 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT