தமிழ்நாடு

குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

DIN


குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதையடுத்து, பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
மின்னல் தாக்கி இருவர் காயம்: தென்காசி அருகே ஆய்க்குடி கம்பிளி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (70), ஆனந்த் (28). இவர்கள் இருவரும் மழை பெய்தபோது ஆய்க்குடி பகுதியில் ஓரமாக ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது மின்னல் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். மேலும், மூன்று ஆடுகள் உயிரிழந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT