தமிழ்நாடு

ஆந்திர அரசுப் பேருந்துகள் நாளை முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கம்

DIN

சென்னையை அடுத்த மாதவரத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்.10-ஆம் தேதி துவக்கி வைத்தார். 

கடந்த 2011 -ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் மாதவரம் ரவுண்டானா பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி செலவில் தமிழகத்தில் முதல்முறையாக அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்க  அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏவால் கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு மறுமதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான திட்டச் செலவு ரூ.95 கோடியாக அதிகரித்தது. 

இந்த புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர்,  திருப்பதி, காளஹஸ்தி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்க முடியும். 

மேலும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் 70-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் உள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஆந்திர அரசுப் பேருந்துகள் அக்.19-ஆம் தேதி முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT