தமிழ்நாடு

திருப்பராய்த்துறையில் துலா ஸ்நானம்: திரளானோர் புனித நீராடினர்

DIN


துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதப் பிறப்பையொட்டி திருச்சி மாவட்டம் திருப்பராய்த் துறையிலுள்ள காவிரியாற்றில் திரளான மக்கள் வியாழக்கிழமை புனித நீராடினர்.
ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்குச் சமமென புராணங்களில் கூறப்பட்டுள்ளது. குடகிலிருந்து புறப்பட்டு பூம்புகாரில் கடலோடு கலக்கும் வரை காவிரி நதிக்கரையில் திருப்பராய்த்துறை, கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய 3 இடங்கள் விசேஷ தீர்த்தங்களாகும்.
ஐப்பசி மாத முதல் நாளன்று திருப்பராய்த்துறையிலும், கடைசிநாளில் மயிலாடுதுறையில் நீராடி, அந்த தலங்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவோருக்கு துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்புடைய துலா மாதப் பிறப்பையொட்டி திருப்பராய்த்துறையில் உள்ள அருள்மிகு பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காவிரியைச் சென்றடைந்தார்.
அங்கு அஸ்திர தேவருக்குத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதன்பின் பக்தர்களுக்கு தாருகாவனேசுவரர் காட்சியளித்தார். துலா ஸ்நானம் எனப்படும் புண்ணிய நீராடுதல் பெருவிழாவில் மாவட்டம் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் திருப்பராய்த்துறை காவிரியாற்றில் புனித நீராடிச் சென்றனர். புண்ணிய நீராடுதல் பெருவிழாவையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பராய்த்துறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT