முகப்பு
தமிழ்நாடு

பர்கூர் அருகே லாரி திருட்டு வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட மூவர் கைது

பர்கூர் அருகே லாரி திருட்டு வழக்கில், தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உள்பட மூவரை போலீஸார்,

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:12 AM
பகிர்:


பர்கூர் அருகே லாரி திருட்டு வழக்கில், தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உள்பட மூவரை போலீஸார், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியைச் சேர்ந்தவர் சி.குமார் (39). லாரி உரிமையாளர். இவர், கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டின் அருகே லாரியை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது, லாரி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வந்தனர். இதில், கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியைச் சேர்ந்த வாசு மகன்கள் பாலசுப்பிரமணி (25), கோகுல்ராஜ் (21), பர்கூர் அருகே உள்ள வலசகவுண்டனூர் செ.கதிர்வேல் (19) ஆகியோர் லாரியைத் திருடியது தெரியவந்தது. 
அவர்களிடம் விசாரித்ததில் சப்பாணிப்பட்டி அருகே லாரியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. லாரியை மீட்ட போலீஸார், மூவரையும் கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட கோகுல்ராஜ், கதிர்வேல் ஆகிய இருவரும், திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.