தமிழ்நாடு

காழ்ப்புணர்ச்சியால் களங்கம்: வாட்ஸ் ஆப் ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

DIN

சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் அமைச்சர் ஜெயகுமார் பேசியது போன்ற ஆடியோப் பதிவு அதிகளவில் வைரலாகப் பரவியது. இந்நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை விளக்கமளித்தார். அதில் அவர் பேசியதாவது:

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல. என் மீது களங்கம் கற்பிக்கவே போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர். 

சசிகலா குடும்பத்தையும், தினகரனையும் நான் கடுமையாக எதிர்ப்பதால், என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவறான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT