தமிழ்நாடு

நவ.4-இல் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் குரூப்-2 மாதிரித் தேர்வு

DIN


கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 4-இல் குரூப்-2 மாதிரித் தேர்வு நடைபெற உள்ளது. 
இதுகுறித்து கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-2 தேர்வு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரித் தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
இந்த மாதிரித் தேர்வை எழுதும் அனைவருக்கும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் நடப்பு நிகழ்வுகள் புத்தகமும், தேர்வுக்கான வழிகாட்டி கையேடும் இலவசமாக வழங்கப்படும். இந்த மாதிரித் தேர்வு முடிந்த பின் அதற்கான விடை, தெளிவான விளக்கங்களுடன் மாணவர்களுக்கு அதே நாளில் வழங்கப்படும். 
பதிவுக்கு: மாதிரித் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தங்களது பெயர், தொடர்பு எண், மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை குறுந்தகவலாக அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் www.kingmakersacademy.com/tnpscmocktest  என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT