முகப்பு
தமிழ்நாடு

கூகுள் டிரென்டிங்கில் மிகவும் பிரபலமான பாஜக முதல்வர் யார் தெரியுமா?

கூகுள் டிரென்டிங்கில் இந்தியாவின் மிகவும் பிரபலமான முதல்வர் எனும் பெருமையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

கூகுள் டிரென்டிங்கில் இந்தியாவின் மிகவும் பிரபலமான முதல்வர் எனும் பெருமையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார். 

இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், 

"இந்தியாவில் உள்ள பாஜக முதல்வர்களுள் உத்தரப் பிரதேச முதல்வர் தான் உச்சத்தில் இருக்கிறார். அது கடந்த 12 மாதங்களின் கூகுள் டிரெண்டிங்கில் பிரதிபலித்துள்ளது. ஆதித்யநாத் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் பிரபலமானவர் அல்ல. கூகுள் டிரென்டிங் வரைபடத்தின்படி, அவருடைய புகழ் வடகிழக்கு முதல் கடைசி தென்னிந்திய மாநிலம் வரை உயர்ந்துள்ளது. 

ஆதித்யநாத்துக்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேச முதல்வர் மிகவும் பிரபலமான முதல்வராக உள்ளார். உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை ஆதித்யநாத்தை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 2-ஆவது இடத்தையும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி 3-ஆவது இடத்தையும் பிடிப்பார்கள். 

கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதியாக ஆதித்யநாத் இருப்பது, அவரை குறித்தும், அவருடைய மக்கள் நல திட்டங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் ஆர்வமாக உள்ளதைய பிரதிபலிக்கிறது" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.