தமிழ்நாடு

அரசு செவிலியர் பயிற்சித் தேர்வில் நாகை மாணவியர் சிறப்பிடம்: ஆட்சியர் பாராட்டு

DIN


தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி பொதுத் தேர்வில், நாகை மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர் 2 பேர், மாநில அளவில் முதலிடம் மற்றும் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில், தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட செவிலியர் பயிற்சிக்கான பொதுத் தேர்வில் தமிழக அளவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர் பங்கேற்றனர். 
இதில், நாகை மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி ஜி. சினேகா 600-க்கு 525 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். இப்பள்ளி மாணவி வி. கஸ்தூரி 519 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
மாநில அளவில் சிறப்பிடம் மாணவியர் ஜி. சினேகா, வி. கஸ்தூரி ஆகிய 2 பேரையும், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் சந்தித்த ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், அவர்களைப் பாராட்டி, வாழ்த்தினார்.
மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் (பொறுப்பு) எம். சாந்தி மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT