தமிழ்நாடு

செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய 50 ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம்

DIN


சென்னை: செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் 50 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செல்போன் பேசியபடி அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் குறித்து ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

பணியின் போது ஓட்டுநர்கள் செல்போனில் பேசுவதால், கவனம் சிதறி சாலை விபத்து நேரிட அதிக வாய்ப்புகள் இருப்பதால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முன் வந்தனர்.

அதன்படி, புகார்கள் மீது விசாரணை நடத்தி 50 ஓட்டுநர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மீண்டும் இதே தவறை செய்தால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT