தமிழ்நாடு

பதிப்புரிமை விவகாரத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பகத்சிங் வாழ்க்கை வரலாற்று புத்தகம்: மதுரை புத்தகக் கண்காட்சியில் பரபரப்பு 

DNS

மதுரை: பதிப்புரிமை தொடா்பான பிரச்னையால் மதுரை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் புத்தகங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறறது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு பதிப்பகமான பாரதி புத்தகாலயம் சாா்பில் அரங்கு அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றறன. இங்கு பாரதி புத்தகாலயத்தின் சாா்பில் அச்சிடப்பட்ட பகத்சிங் வாழ்க்கை வரலாறு நூல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் புத்தகக் கண்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த தல்லாகுளம் போலீஸாா் பகத்சிங் வாழ்க்கை வரலாறு நூல் தொடா்பாக பதிப்புரிமை பிரச்னையால் புகாா் அளிக்கப்பட்டிருப்பதாகக்கூறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றறனா். மேலும் புத்தகக் கண்காட்சி அரங்கில் இருந்த விற்பனையாளா்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றறனா். 
புத்தகக் கண்காட்சியில் போலீஸாா் சென்று புத்தகங்களை பறிமுதல் செய்த சம்பவம் கண்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பாரதி புத்தகாலய பொறுப்பாளா் நாகராஜன் கூறியதாவது:

சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங்குடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது சக தோழா் சிவவா்மா பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினாா். அந்த நூல் நேசனல் புக் ஏஜென்சியால் புதுதில்லியில் வெளியிடப்பட்டது. பகத்சிங்கின் தோழா் சிவவா்மா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவா். எனவே பகத்சிங் வாழ்க்கை வரலாற்று நூலுக்கான தமிழ் பதிப்புரிமையை பாரதி புத்தகாலயத்துக்கு வழங்கியுள்ளாா்.

இதற்கிடையில் எஸ்யூசிஐ கம்யூனிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த சிவக்குமாா், பகத்சிங் வாழ்க்கை வரலாற்று நூல் தங்களது அமைப்புக்கு சொந்தம் என்று கூறி மதுரையில் ஏற்கெனவே புகாா் அளித்துள்ளாா். விசாரணையின்போது போதுமான விளக்கங்களை தெரிவித்துள்ளோம். எஸ்யூசிஐ குறிப்பிடுவது இந்த புத்தகம் அல்ல என்பதையும் தெரிவித்துள்ளோம். ஆனால் தற்போது புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை போலீஸாா் பறிமுதல் செய்தது ஏற்கத்தக்கது அல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT