தமிழ்நாடு

ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு: சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

DIN


கணவரிடமிருந்து தன்னை பிரிக்க முயற்சிப்பதாகக் கூறி, ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது மணிப்பூரைச் சேர்ந்த பெண் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக, ஷேம்ரின் வாஷினோ டேவிட் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மணிப்பூரைச் சேர்ந்த நான், பேஃபின் டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இந்த திருமணத்தை எனது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கும் எனது கணவருக்கும் என் உறவினர்கள் தொடர்ந்து பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் தூண்டுதலின் பேரில் எனது உறவினர்கள் எங்களைத் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். மேலும் எனது உடலில் தீய ஆவி இருப்பதாகவும், அதை விரட்ட வேண்டும் என்றும் உமாசங்கர் கூறுகிறார்.
மறுபுறம் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளும்படி பெண்கள் நல ஆணையம் என்னை வற்புறுத்துகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தேன். அந்த புகாரை வாங்க அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் வில்லிவாக்கம் போலீஸார் என்னையும் எனது கணவரையும் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே, எங்களை போலீஸார் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

SCROLL FOR NEXT