தமிழ்நாடு

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார்?: அறிக்கை தர வருமானவரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

DIN

சென்னை:  ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்பது குறித்து அறிக்கை தர வருமானவரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 

வருமானவரித்துறை எதிர் மனு தாரராக உள்ள சொத்து வரி கணக்கு செலுத்துதல் தொடர்பான வழக்கு ஒன்று திங்களன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில்தான் வருமான வரித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்பது தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் . வாரிசு குறித்து ஜெயலலிதா உயில் எஎதுவும் எழுதியுள்ளாரா என்பது குறித்தும் வருமான வரித்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

இவ்வாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT