தமிழ்நாடு

5 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

DIN


எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மத்தியச் சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 5 பேர் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தமிழகச் சிறைகளில் 10 ஆண்டுகளை கழித்த, சிறை நிர்வாகத்தால் நன்னடத்தை சான்று அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்' என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் தண்டனை கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர். இதில், மதுரை மத்தியச் சிறையில் 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் தண்டனை கைதிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 6 கட்டங்களில் 160 -க்கும் மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மேலும் 5 ஆயுள் தண்டனை கைதிகள் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த 5 பேரையும் அவர்களது குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT