தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது: ஜி.ராமகிருஷ்ணன்

DIN


மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வியாழக்கிழû ம கூறியதாவது:
மத்திய அரசின் நிதி கிடைக்காது என்ற காரணத்தால், 15 மாணவர்களுக்கும் குறைவாக சேர்க்கை உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசுத் திட்டமிட்டிருப்பதாக செய்தியகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு தமிழகம் முழுவதும் 800 -க்கும் அதிகமான பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு பள்ளிகள் மூடப்படுவதால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். நீண்ட தூரம் பயணிப்பது, போக்குவரத்துச் செலவு என்பன போன்ற சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். எனவே, அரசுப் பள்ளிகள் மூடும் முடிவை தமிழக அரசு கைவிட்டு, மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT