தமிழ்நாடு

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

DIN

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சேலம் - சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 8 வழிச்சாலை திட்டத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், சாலை வழித்தடத்தை மாற்றுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. திட்டத்தை இறுதி செய்யும் வரை நிலஆர்ஜித நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. 8 வழிச்சாலையின் அகலத்தை குறைத்து 6 வழிச் சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் அகலத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை வழிச்சாலை திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட பின் பணிகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் நிலஆர்ஜித நடவடிக்கைக்கு ஏன் தடைவிதிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றி 20ல் விரிவான அறிக்கை தர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT