தமிழ்நாடு

கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை:  மக்களவை துணைத் தலைவர்

DIN


கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை என்றார் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை.
கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பங்கேற்ற அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: 
கடந்த ஆறு மாதங்களாக மத்திய அரசுடன் போராடியதால்தான் உள்ளாட்சித் துறைக்கான நிதி ரூ.390 கோடி கிடைத்துள்ளது. ஒரு கட்சியைச் சேர்ந்தவரைப் பற்றி கருத்துக்கூற முடியாது. 
தமிழக முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 65 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 85 ரூபாய்க்கு விற்பதற்கு பெட்ரோலுக்கு மத்திய அரசு விதிக்கும் கலால் வரி தான் காரணம். எனவே, மத்திய அரசு தான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும். 
எப்போதும் ஜிஎஸ்டியை எதிர்க்கும் அரசாகத்தான் தமிழக அரசு உள்ளது. கூட்டணிக்காக நாங்கள் யார் கதவையும் தட்டவில்லை. அமித் ஷா தான் அரசியல் கதவைத் தட்டி வருகிறார். 
ஜெயலலிதா கூறியது போல தனித்து எங்களால் வெற்றிபெற முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT