தமிழ்நாடு

நிலக்கரி பற்றாக்குறை: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

DNS


மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1,020 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் இயங்கி வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஓா் அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மேட்டூா் அனல் மின் நிலையத்தை இயக்க நாளொன்றுக்கு 28,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. புதன்கிழமை (செப்.19) நிலவரப்படி, மேட்டூா் அனல் மின் நிலையத்தில் சுமாா் 72 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

கடந்த சனிக்கிழமை மேட்டூா் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் உள்ள இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது அலகிலும் நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இரண்டாவது அலகில் பழுது நீக்கம் செய்யப்பட்ட பிறகும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதால், உற்பத்தி தொடங்கப்படவில்லை. கடந்த நான்கு நாள்களாக 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அலகிலும் நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 1,020 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT