தமிழ்நாடு

கோவாவை போல புதுவையிலும் கேசினோ' திட்டம் விரைவில் அமல்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்

DIN


கோவாவைப் போல புதுவையிலும் கேசினோ' (கப்பலில் நடத்தப்படும் சூதாட்டத்துடன் கூடிய மனமகிழ் மன்றம்) விரைவில் அமல்படுத்தப்படும் என்று புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில், புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற புதுவை சுற்றுலாவில் உள்ள சவால்களும், வாய்ப்புகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடக்கிவைத்து அவர் பேசியதாவது:
மத்திய அரசின் நிதியுதவியுடன் தற்போது புதுவையில் ரூ. 183 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடமிருந்து சுற்றுலாத் துறைக்கு அதிக நிதி பெற்ற மாநிலம் புதுவைதான். இன்னும் 2 மாதங்களில் மேலும் ரூ. 230 கோடியிலான வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி கோரி கருத்துரு அனுப்ப உள்ளோம்.
சுற்றுலா, பெட்ரோலியப் பொருள்கள் மீதான விற்பனை வரி, மது விற்பனை ஆகியவை மூலம்தான் புதுவைக்கு 32 சதவீத வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் புதுவைக்கு வருவாய் பாதிக்கப்படும்.
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவாவைப் போல, கேசினோ திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும். நீர் விளையாட்டுகளை அறிமுகம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக - புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு விமான சேவை வெற்றி அடைந்துள்ளது. அதேபோல, புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கொச்சிக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT