தமிழ்நாடு

நான்காவதும் பெண் குழந்தை என்று  நினைத்து கருக்கலைத்த பெண் மரணம்: வயிற்றில் ஆண் சிசு இருந்த பரிதாபம் 

மதுரை அருகே நான்காவதும் பெண் குழந்தை என்ற சந்தேகத்தால் கருக்கலைப்புக்கு முயன்று உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் ஆண் சிசு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை அருகே நான்காவதும் பெண் குழந்தை என்ற சந்தேகத்தால் கருக்கலைப்புக்கு முயன்று உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் ஆண் சிசு இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரத்தைச் சோ்ந்தவா் ராமா். இவரது மனைவி ராமுத்தாய். இவா்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் ராமுத்தாய் மீண்டும் கா்ப்பம் தரித்துள்ளாா். இதில் நான்காவதும் பெண் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் தனியாா் மருத்துவமனை செவிலியரிடம் கருக்கலைப்பு செய்ய முயன்ற போது ராமுத்தாய் உயிரிழந்தாா். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய செவிலியா் கைது செய்யப்பட்டுள்ளாா்.  அதேசமயம் ராமுத்தாயின் சடலம் உசிலம்பட்டியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ராமுத்தாயின் பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் இருந்தது ஆண் சிசு என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்..! - பிரசாந்த் கிஷோர் கறார்!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டீசர்!

ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்கள்

பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பு: ‘பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது!' -பிரியங்கா

சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோற்றதை ஒருபோதும் மறக்க மாட்டோம்: கௌதம் கம்பீர்

SCROLL FOR NEXT