தமிழ்நாடு

பெங்களூரிலிருந்து கோவை, தஞ்சைக்கு சொகுசுப் பேருந்து சேவை

DIN


பெங்களூரிலிருந்து தஞ்சாவூர், கோயம்புத்தூருக்கு சொகுசுப் பேருந்துகள் வரும் 24-ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெங்களூரிலிருந்து தஞ்சாவூருக்கு குளிர்சாதன வசதியுடனான படுக்கை வசதி கொண்ட சொகுசுப் பேருந்து சேவை செப். 24-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பேருந்து பெங்களூரு சாந்திநகர் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, காலை 6.15 மணிக்கு தஞ்சாவூரைச் சென்றடைகிறது. 
இதேபோல, தஞ்சாவூரிலிருந்து தினமும் இரவு 9 மணிக்குப் புறப்பட்டு, காலை 5.45 மணிக்கு பெங்களூரை வந்தடையும். கட்டணமாக ரூ.625 வசூலிக்கப்படும்.
பெங்களூரிலிருந்து கோயம்புத்தூருக்கு குளிர்சாதன வசதியுடனான படுக்கை வசதி கொண்ட சொகுசுப் பேருந்து சேவை சாந்திநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, காலை 6.30 மணிக்கு கோயம்புத்தூரைச் சென்றடைகிறது. இதேபோல, கோயம்புத்தூரிலிருந்து தினமும் இரவு 10.15 மணிக்குப் புறப்பட்டு, காலை 6.30 மணிக்கு பெங்களூரை வந்தடையும். கட்டணமாக ரூ.580 வசூலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு www.ksrtc.in  என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT