தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN


தேனி மாவட்டம் சுருளி அருவியில் வியாழக்கிழமை மாலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர்.
தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வெப்பச்சலனம் காரணமாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. மேகமலையில் உள்ள மணலார் அணைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சுருளி அருவியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வெள்ளிக்கிழமை அருவியில் வரும் நீர்வரத்தை பொறுத்தே, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT