தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டியது சோத்துப்பாறை அணை

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோத்துப்பாறை அணை 126.28 அடி உயரம் கொண்டது. சோத்துப்பாறை அணை 2 மாதத்துக்கு முன் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த சில நாள்களாக அகமலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த சனிக்கிழமை காலை 121 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. சனிக்கிழமை மாலை முதல் அகமலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால், 30 கன அடியாக இருந்த நீர்வரத்து 100 கனஅடியாக உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீரையும் வராக நதி வழியாக வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT