தமிழ்நாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய உத்தரவு

DIN

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ. 913 கோடி மதிப்புள்ள சொத்துகளை நிர்வகிக்க, தனியாக நிர்வாகி ஒருவரை நிர்வகிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக மாநில அதிமுக நிர்வாகியான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் 2-ஆம் தேதியன்றி விசாரணைக்கு வந்த போது,  ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வருமான வரித்துறை, அமலாக்க இயக்குநரகம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது.

இந்த வழக்கானது புதனன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை ஏப்.25-க்குள் தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT