வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு: ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ்
வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை: வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வன்னியர் கல்வி அறக்கட்டளை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வன்னியர் சொத்துகளை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது துணைவியார் பெயரில் மாற்றி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி அவருக்கு வழக்கறிஞர் க.பாலு மூலமாக வழக்கறிஞர் அறிவிக்கையை அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.