தேர்தலை புறக்கணிக்கும் தமிழக கிராமம்!
ராமநாதபுரத்தில் உள்ள மேலசிறுபோத்து கிராமம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள மேலச்சிறுபோது கிராமம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றாத காரணத்தால் மேலச்சிறுபோது கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பிரமாண்ட பேரணியை திங்கள்கிழமை நடத்தினர்.
அப்போது தங்களுடைய கோரிக்கைகளையும் முன்வைத்து கோஷமிட்டனர். அதில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, பள்ளி என எதுவும் தங்கள் கிராமத்தில் முறையாக இல்லை என்று தங்களின் உரிமைகளை கோரி போராட்டம் நடத்தினர்.
Advertisement
மேலும் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க்கடன் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து வருகிற 2019 மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டுமொத்த கிராமும் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.