Vijayakanth Release video 
தமிழ்நாடு

பிரசாரத்துக்கு வருவாரா விஜயகாந்த்? விடியோவில் பதில்

தமிழகம் மற்றும் இந்தியாவில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டும் ஒன்றுதான்.

DIN


தமிழகம் மற்றும் இந்தியாவில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டும் ஒன்றுதான்.

கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வருவாரா? போலியில்லாத நிஜக் கோபத்தோடு எந்த முன்னேற்பாடுகளும் இல்லாத தனது சொந்த உரையை ஆற்றுவாரா? என்பதே.

இது தேமுதிகவினருக்கு மட்டுமல்லாமல், ஓரமாக நின்று அரசியலை உற்று நோக்கும் சாதாரண மக்களுக்கும் எழும் எதிர்பார்ப்புதான்.
 

இதற்கு அவரே பதில் சொல்லியிருக்கிறார். அவரது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு விடியோ வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது பிரசாரத்துக்கு வருவீர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னதற்கு, விஜயகாந்த் விரைவில் வருவேன். அங்கு வந்து என் பேச்சைக் கேட்க சொல்லுங்கள் என்று பதிலளிக்கிறார்.

மோடியைப் பற்றி கேட்கும் போது, மோடி நல்லவர், மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தனது விருப்பத்தையும் பதிவு செய்கிறார் விஜயகாந்த்.

அனைவரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்று நம்புவோம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் பொங்கல் வாழ்த்து! | Modi | Pongal

ஓடிடியில் விமலின் மகாசேனா!

பொங்கல் வைக்க உகந்த நேரம்!

எம்ஜிஆரா? நம்பியாரா? கார்த்தியின் வா வாத்தியார் - திரை விமர்சனம்!

ரூ.45,000 சம்பளத்தில் இந்தியன் ரயில்வேயில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT