தமிழ்நாடு

கமலுடனான நட்பைக் கெடுத்து விடாதீர்கள்: ரஜினிகாந்த்

DIN



மக்களவைத் தேர்தலில் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கமல் கூறியுள்ளாரே என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, என்னுடைய அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அதில், எந்த மாற்றமும் இல்லை என்றார்.
அதன் பிறகும் செய்தியாளர்கள் தொடர்ந்து கமலுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, இதற்கு மேல், இதைப் பற்றி நான் எதுவுமே பேச விரும்பவில்லை. இதை தயவு செய்து ஊடகங்கள் பெரிதாக்கி, எங்களுடைய நட்பைக் கெடுத்துவிடாதீர்கள் என்றார் ரஜினி.
கமலுக்கு நிராகரிப்பு: மக்களவைத் தேர்தலில் ரஜினி எங்களை ஆதரிப்பார் என்று நம்புகிறோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஒருமுறை செய்தியாளர்களிடம் கூறினார்.  மற்றொரு முறை, எங்களை ஆதரிப்பதாக ரஜினி என்னிடம் கூறினார். ஆனால், தொடர்ந்து ஆதரியுங்கள் என்று கோர முடியாது. அவராகத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கமல் கூறியிருந்தார். எனினும், கமலின் வேண்டுகோளை ரஜினி நிராகரித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT