தமிழ்நாடு

கொடநாடு விவகாரம்: முதல்வர், மு.க.ஸ்டாலின் பேச தடை

DIN

கொடநாடு வழக்கு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேச தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடர்புபடுத்தி பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீதான தடையை நீக்கக் கோரியும், தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு சம்பவத்தில் தமிழக முதல்வரை தொடர்புபடுத்தி மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தும் கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வரை தொடர்புபடுத்தி பேசி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசின் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார்.
 இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரத்தில் இருவருக்குமே தொடர்பில்லாதபோது, மீண்டும் மீண்டும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியோ அல்லது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ பேசக்கூடாது என தடை விதித்தார். இந்த உத்தரவை மீறி பேசுவது நீதித்துறை விவகாரத்தில் தலையிடுவது போலாகும் என உத்தரவிட்ட நீதிபதி, மு.க.ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தார். மேலும், மு.க.ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT