தமிழ்நாடு

ஆண்டிப்பட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை

DIN

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ரு.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சோதனையின் போது காவலர்களை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு பண்டல் பண்டலாக இருந்த  ரூ.1.48 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. அப்போது அமமுக அலுவலகத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT