தமிழ்நாடு

நாமக்கல் அருகே கார் விபத்து: கொமதேக வேட்பாளர் காயம்

DIN


 நாமக்கல் அருகே  புதன்கிழமை இரவு  நேரிட்ட   விபத்தில், காரில் சென்ற  நாமக்கல் மக்களவைத் தொகுதி கொமதேக வேட்பாளர் சின்ராஜ், அவரது மனைவி ஆகியோர் காயமடைந்தனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில்  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராஜ்  போட்டியிடுகிறார்.  செவ்வாய்க்கிழமை பிரசாரத்தை முடித்த நிலையில் ஓய்வெடுத்த அவர், புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல், தனது மனைவி சாந்தியை அழைத்துக் கொண்டு கரூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றதாகத் தெரிகிறது. நாமக்கல் -  மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  சென்றபோது நல்லிபாளையம் அருகே எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை  இழந்த கார்,  சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.  இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்ராஜ், அவரது மனைவி ஆகியோர் நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நல்லிபாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT