தமிழ்நாடு

10, 11,12 -ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அட்டவணை வெளியீடு

DIN


தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்:
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி தொடங்கி ஜுன் 13-ஆம் தேதி முடிவடைகிறது.  இதற்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், பழைய வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி  ஜுன் 21-ஆம் தேதி முடிவடைகிறது.  காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும். இதேபோன்று பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

SCROLL FOR NEXT