தமிழ்நாடு

நாகை அருகே கோவில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் 

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோவில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

DIN

சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோவில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரியில் திங்களன்று கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கோவில் திருவிழாவிற்கு  வந்திருந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு அங்கு விற்கப்பட்ட ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்துள்ளனர்.

இதில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT