தமிழ்நாடு

துரை தயாநிதிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

DIN


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. அழகிரியின் மகனுமான தயாநிதிக்கு சொந்தமாக சென்னை மற்றும் மதுரையில் உள்ள ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மதுரை கிழவளவில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதால் அரசுக்கு ரூ.257 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் துரை தயாநிதி உட்பட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில், துரை தயாநிதிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT