தமிழ்நாடு

மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

DIN


வங்கடலின் மத்திய பகுதியில் இன்று வியாழக்கிழமை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில், தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று வியாழக்கிழமை (ஏப் 25) உருவாகவுள்ளது. இது ஏப்ரல் 27, 28-ஆம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், இலங்கையின் கிழக்கு கடற்கரையைத் தொட்டுச் செல்ல வாய்ப்புள்ளது. 

எனவே, பாதுகாப்பு கருதி நாளை வியாழக்கிழை முதல் (ஏப்ரல் 26) முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் தற்போது கோடை  மழை பெய்து வருகிறது. இன்று வியாழக்கிழமை (ஏப். 25) சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT