தமிழ்நாடு

சிவப்பு நிறத்தில் இருந்தால் அது ரெட் அலர்ட் இல்லை: பாலச்சந்திரன் விளக்கம்

DIN


சென்னை: ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் ரெட் அலர்ட் பற்றி விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் எனப்படும் மழை எச்சரிக்கை  கொடுக்கப்படுவதில்லை. நிர்வாகத் துறை தேவைகளுக்காக ஏதேனும் ஒரு பகுதியில் கன மழை பெய்யும் என்றால் அதனை தனித்துக் காட்ட இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு அளவு மழைக்கும் ஒவ்வொரு நிறம் பயன்படுத்தப்படுவது போல சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சிவப்பு நிறத்துக்கும் ரெட் அலர்ட்டுக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை. இதனை ஊடகங்கள் ரெட் அலர்ட் என்று பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT