தமிழ்நாடு

கோடை விடுமுறை: முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

கோடை விடுமுறை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பெய்துள்ள கோடை மழையால் பசுமையாக காட்சியளிக்கிறது. 
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், சனி, ஞாயிறு வார விடுமுறை காரணமாகவும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. 
முதுமலை புலிகள் காப்பகம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதாலும், கூடலூர்-
மைசூரு-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதாலும் தென்னிந்தியாவின் பல பகுதியிலிருந்தும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதலில் முதுமலையைப் பார்த்துவிட்டு வருவது வழக்கமாக உள்ளது.
தற்போது கோடை மழை பரவலாகப் பெய்து முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. 

முதுமலை கார்குடி வனப் பகுதியில் சாலையோரம் வந்து கூட்டமாக நிற்கும் மான்கள். 

இங்குள்ள வன விலங்குகள் சாலையோரம் வந்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் அவற்றைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT